இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதக் கணிப்பு 6.9 சதவீதமாக உயர்வு - உலக வங்கி அறிவிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

Update: 2022-12-07 10:30 GMT

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்தது. அதை கடந்த அக்டோபர் மாதம் 6.5 சதவீதமாக குறைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மாறுபட்டு 6.9 சதவீதமாக இருக்கும் என்று உயர்த்தி கணித்துள்ளது.


கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது கால் ஆண்டில் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மீண்டும் எழுந்தது தான் இதற்கு காரணம் என்று உலக வங்கி கூறியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை உலக அமைப்பு ஒன்று உயர்த்திஇருப்பது இதுவே முதல் முறையாகும்.

Similar News