ரஃபேல் போர் விமானங்களைக் கண்டு ஆடிப்போன பாகிஸ்தான் - வயிற்றெரிச்சலில் புலம்பல்.!

போர் விமானங்களின் வருகை பாகிஸ்தானை எரிச்சலூட்டியது.

Update: 2020-07-30 15:38 GMT

36 மீடியம் மல்டி ரோல் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்திருந்தது. அதில் ஐந்து போர் விமானங்கள் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையின் விமான நிலையத்தில் நேற்று வந்து இறங்கியது. பிரெஞ்சு விமான உற்பத்தியாளர் டஸ்ஸால்ட் தயாரித்து இந்திய விமானப்படையின் திறன்களை மேம்படுத்த சேர்க்கப்பட்ட இந்தப் போர் விமானங்களின் வருகை பாகிஸ்தானை எரிச்சலூட்டியது.

வாரா வாரம் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆயிஷா பாரூகி இந்தியா ரஃபேல் போர் விமானங்களை வாங்கியது அளவுக்கு அதிகமான ஆயுதங்களைக் குவிப்பதாகும் என்று விமர்சித்தார்.

உலக சமூகம் இந்தியா அளவுக்கு அதிகமான ஆயுதங்களை குவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் இது தெற்கு ஆசியாவில் இதேபோல ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தன்னுடைய அணு ஆயுத கிடங்கை விரிவடையச் செய்யவும் நவீனமயமாக்கும் இந்தியா தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளை குறித்து அவர் கவலை தெரிவித்தார். இந்தியா தன்னுடைய பாதுகாப்புக்கும் பாதுகாப்பு தேவைக்கும் அதிகமான ஆயுதங்களை குவிப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்றும் உலக ஆராய்ச்சி மையங்களின் அறிக்கையின் படி இந்தியா உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சமீபத்தில் பல துப்பாக்கிச் சூடுகள் நடந்த நிலையில், இந்தியா தனது ஆயுதங்களை மேம்படுத்தியது பாகிஸ்தானில் ஒரு வகையான அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதை இது உறுதிப்படுத்துவதாக உள்ளது. பாக்கிஸ்தான், உலக சமூகம் இந்தியா அதிக ஆயுதங்களை குவிப்பதில் இருந்து தடுத்து தெற்கு ஆசியாவில் அமைதி தன்மைக்கு இந்தியா குந்தகம் விளைவிப்பதை தடுக்க வேண்டும் என வயிற்றெச்சலில் புலம்பியுள்ளது.

Source:https://swarajyamag.com/insta/indias-rafales-rattle-pakistan-foreign-office-condemns-acquisition-just-a-day-after-ambala-landing

Similar News