இந்திய ராணுவத்தில் ஈடுபடும் ட்ரோன்கள் - ஏன் தெரியுமா?
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தில் டிரோன்கள் இணைப்பு
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தில் டிரோன்கள் இணைக்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் போர் முறைகளும் நவீன மையத்தை எட்டி வருகின்றன. இதில் டிரோன்கள் மூலமாக தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
வெடிபொருட்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் இந்த டிரோன்கள் படைகளுக்கு மிகுந்த தேவையாக இருக்கிறது.
சமீப காலத்தில் நடந்த முடிந்ததும் நடந்து வருவதுமான பல மோதல்களில் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அஜர்பைஜான்,அர்மீனியா, சிரியா மீதான தாக்குதல்களும் சவுதி அரேபிய எண்ணெய் வயல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்த டிரோன்கள் முக்கிய பங்காற்றின.
எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது உலக நாடுகளை மிகப் பெரும் சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கும் ரஷ்யா உக்ரைன் போரிலும் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன.
நாட்டின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பத்தை இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.அதன்படி இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை தயாரித்து வழங்க இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டனர. இந்த நிறுவனங்கள் தயாரித்து வழங்கிய டிரோன்கள் மட்டுமின்றி தானியங்கி கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஆயுதமேந்திய டிரோன் திரள் அமைப்பையும் ராணுவம் தொடங்கியுள்ளது.
அந்த நிறுவனங்கள் தயாரித்து வழங்கிய டிரோன் அமைப்பபு நேற்று ராணுவத்தில் முறைப்படி இணைக்கப்பட்டது.இந்த டிரோன் அமைப்பானது ஒரே நிலையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும் பல டிரோன்களைக் கொண்டிருக்கின்றன.
மேலும் பலவிதமான வெடிபொருட்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் திறனும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு தாக்குதலை மேற் கொள்வதன் மூலம் எதிரிகளின் நிலைகளை அழிக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த டிரோன்கள் தங்களுக்குள் பணிகளை தானாக பகிரவும்,தேவைப்படும் இடங்களுக்கு செல்லவும் இலக்கை நோக்கி நகரும்போது மோதலை தவிர்க்கவும் தேடலை மேற்கொள்ளவும் செய்கின்றன.