திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ராஜ்நாத் சிங்.!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ராஜ்நாத் சிங்.!

Update: 2019-12-18 02:30 GMT

கடந்த கூட்டத் தொடரில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது இதற்கு இரு அவைகளும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற நிலையில் அமலுக்கு வந்துள்ளது,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கம் மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது,சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி இருக்கிறது.


இந்நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் இந்தியா- அமெரிக்கா அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க வாஷிங்டன் சென்றுள்ள ராஜ்நாத் சிங் அங்கு இந்திய சமுதாயத்தினரிடையே  பேசுகையில் இதனை தெரிவித்தார்.


குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு வாழ்வதற்கான ஒரு சட்டத்திருத்தம் என்றும் விளக்கமளித்தார்.


இது ஒரு சட்டமே தவிர இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று கூறிய அவர் அந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியவர்களுக்கு குடியுரிமை வழங்கவே இந்த குடியுரிமை கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.




https://twitter.com/rajnathsingh/status/1206932525441937409?s=19

Similar News