நிலவு நம்மைவிட்டு விலகிப் போகிறதா?

நிலவு நம்மைவிட்டு விலகிப் போகிறதா?

Update: 2020-01-20 05:26 GMT

சூரிய குடும்பத்தில் உள்ள துணைக் கோள்களில், நமது பூமியைச் சுற்றிவரும் நிலவானது
தனிப்பட்ட இடத்தைப் பிடிக்கிறது. பூமிக்கும் நிலவுக்குமான சராசரித் தொலைவு 3,84,000
கிலோமீட்டர்கள் ஆகும். நிலவு பூமியை சுற்றி வருவதால் தான் புவியில் பருவநிலை மாறுதல்கள்,
சூரிய ஈர்ப்பாற்றல் ஏற்றத்தாழ்வுகளைச் சமாளித்தல் போன்ற பல அனுகூலங்களை பூமி பெற்று
வருகிறது.


மேலும் பூமிக்கு நிலவானது இயற்கையில் அமைந்த தற்காப்பு அரணாகச்
செயல்படுகிறது. அதாவது பூமி மற்றும் நிலவு அமைப்பை நோக்கி வரும் எரிகற்களின் ஒரு பகுதி
நிலவில் மேற்பரப்பில் மோதி விடுகிறது. இதன் காரணமாக பூமிக்கு விண்கற்களால் ஏற்படும்
ஆபத்து பெருமளவு தவிர்க்கப்படுகிறது.


சந்திராயன் 1 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம் இங்கு
இணைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நிலவின் தரைப்பகுதியினைத் தெளிவாகக் காட்டுகிறது.


மேலும் புவியின் உயிர்க்கோளம் சிறப்பாக அமைய நிலவு பெருமளவு துணை புரிகிறது. நிலவை
ஆராய்ச்சி செய்வதற்கு பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வகையிலான
ஆராய்ச்சிகளில் நமது பாரத நாடும் பெருமளவு வெற்றி கண்டு வருகிறது. சந்திராயன் 1, 2 ஆகிய
செயற்கைக்கோள்களை இந்தியா நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தி
நிலவு குறித்த ஆராய்ச்சியில் தனக்கென தனி இடத்தை எடுத்துக் கொண்டுள்ளது.


நிலவானது பூமியை சுற்றி வருவது கணக்கிடப்பட்டாலும், நிலவின் இயக்க அமைப்பில்
நிலவானது கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பது தெரிய
வருகிறது.


நிலவு இவ்வாறாக பூமியை விட்டு விலகிச் செல்வது கிரகணங்கள் மூலமாக அறிந்துகொள்ள
முடியும். நிலவானது நம்மைவிட்டு ஒவ்வொரு ஆண்டும் 4 சென்டி மீட்டர் தொலைவு விலகிச்
செல்கிறது. முற்காலங்களில் கிரகணங்களானது அதிக பரப்பளவில் பூமியில் தெரிந்திருக்கும்.
எதிர்காலத்தில் தற்போது இருக்கும் கிரகணங்களின் அளவை விட வெகு சிறிய அளவிலே
கிரகணம் தோன்றும். அல்லது கிரகணமானது ஒரு சிறு புள்ளியாகக் கடந்து சென்றுவிடும்.


Similar News