லட்சிய திட்டங்களை நோக்கி முன்னேறி வரும் இஸ்ரோ- வெளிநாட்டு விண்வெளி நிலையங்களுக்கெல்லாம் சவால்!

நிலவுக்கு மனிதன், விண்வெளி நிலையம் என இலட்சிய திட்டங்களை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று வீர முத்துவேல் கூறியுள்ளார்.

Update: 2024-02-11 15:45 GMT

இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புவது விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற  லட்சிய திட்டங்களை நோக்கி , இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று சந்திரயான்-3  திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான்-3 ன் திட்ட இயக்குனர் பி.வீர முத்துவேல் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-


பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரோ தலைவரும் ஏற்கனவே 2040 - ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் 2035-ஆம் ஆண்டுக்குள் நமது வெண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவை இஸ்ரோ எடுத்துள்ள மிகவும் லட்சிய திட்டங்கள் ஆகும் .இந்த பாதையை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம். சந்திரயான்-3 விண்கலத்தை பொறுத்தவரை லேண்டர் மற்றும் ரோவர் பணி வெற்றிகரமாக செயல்பட்டு ஒரு நிலவு நாளை நிறைவு செய்தது.


அதனுடைய செயல்பாடுகளை நிறுத்தியும் மீண்டும் இயக்கி பார்த்து செய்யப்பட்ட பரிசோதனையையும் வெற்றிகரமாக முடித்தோம். அதில் விண்கலம் தரையிறங்கிய அதே எஞ்சினை பயன்படுத்தினோம். மீண்டும் ஒரு பூமி நாளுக்கு கருவியை இயக்கினோம். நிலவைச் சுற்றி வரவேண்டிய உந்துவிசை தொகுதியை அனைத்து பணி நோக்கங்களையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. உந்துவிசை தொகுதியில் சில உந்து சக்திகள் கிடைத்தது. நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக கொண்டு வந்து நிரூபித்ததால் இந்த தொகுதியை மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு கொண்டு வந்தோம் இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Dailythanthi

Similar News