'பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் ஆகும்' : எதிர்கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை-பிரதமர் மோடி!

பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் ஆகும் எனவும் எதிர்கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-02-05 16:30 GMT

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

"இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செங்கோலுடன் குடியரசு தலைவர் வந்தபோது, அவரது பின்னால் நாங்கள் அணிவகுத்து வந்தோம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசு தலைவர் உரை பிரதிபலிக்கிறது. இளைஞர், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 சக்திகளை பற்றி பேசவுள்ளோம். எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.


எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிலர் தேர்தலில் போட்டியிடவே அஞ்சுகின்றனர். நாட்டுக்கு ஆரோக்கியமான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத்தலைவர் உரை வெளிப்படுத்தியுள்ளது. 4 தூண்கள் பற்றி குடியரசுத்தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியின் தற்போதைய நிலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். காங்கிரசின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு.


பாஜக 3-வது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும். இது மோடியின் உத்தரவாதம். ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை. பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் தேவைப்படும். அதற்குள் ஐந்து தலைமுறைகள் கடந்திருக்கும் என்றும் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸின் நோக்கமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் சக்தியே பாஜக  எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. கூட்டணி கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. காங்கிரஸின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு தான்" இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :Oneindia.com

Similar News