“ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” - இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்!!

“ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” - இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்!!

Update: 2019-09-12 10:49 GMT


காஷ்மீர் மாநிலத்திற்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நிற்கிறது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போம் என்று கூறி எதிர்த்து வருகிறது.


திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் 370 நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கட்சிகளை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகின்றது.


இந்த நிலைலயில், இஸ்லாமிய அறிஞர்களின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அனைத்து காஷ்மீரிகளும் எங்கள் சகோதரர்கள். எந்தவொரு பிரிவினைவாத இயக்கமும் நாட்டிற்கு நல்லதல்ல. காஷ்மீர் மக்களுக்கும் அது தீங்கு விளைவிக்கும்.


இது, காஷ்மீர் மக்களின் விருப்பத்தையோ அல்லது அவர்களின் சுயமரியாதை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பொருட்படுத்தாது. இந்தியாவுடன் ஒன்றாக இணைந்து இருப்பதுதான் காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நன்மை பயக்கும்.


தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, காஷ்மீரை அழிப்பதில், பாகிஸ்தான் முனைந்து நிற்கிறது. காஷ்மீரை அழிக்க துடிக்கும் காஷ்மீரில் உள்ள சக்திகளும், பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படுகின்றன. எதிரிகள் காஷ்மீரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, அதனை ஒரு போர்க்களமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.


இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் பொது குழு கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய அதன் பொது செயலாளர் மெகமூத் மதானி, “இந்திய முஸ்லிம்கள், 370-வது சட்ட பிரிவு நீக்கத்துக்கு எதிராக உள்ளனர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பாகிஜ்தான் முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திய அரசின் பக்கம்தான் நிற்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்தியா எங்கள் தேசம். இந்தியாவின் பாதுகாப்பிலும், ஒற்றுமையிலும் ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.” என்றார்.




https://twitter.com/ANI/status/1172055233154953217



ஆனால், இங்குள்ள திருமாவளவனுக்கும், திமுகவினருக்கும் காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது ஏன் புரியவில்லை என்பதுதான் நமக்கு புரியவில்லை.


Similar News