ஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல ! கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் !!

ஜெயலலிதா தங்கள் இதய தெய்வம் மட்டுமல்ல ! கோவையில் அவருக்கு சிலை வடித்து, பூஜைகள் செய்து தினமும் வணங்கும் அதிமுக தொண்டர்கள் !!

Update: 2019-07-19 11:38 GMT


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் இதய தெய்வம் என்றுதான் அழைப்பார்கள். அதை கோவை அதிமுக தொண்டர்கள் இப்போது மெய்ப்பித்து சிலை செதுக்கி தெய்வங்களுடன் தெய்வமாக வைத்து வழிபாட்டு வருவது சிலிர்க்க வைத்தது.  


கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100-வது வார்டு, கணேசபுரம் பகுதியில் உள்ளது மூரண்டம்மன் கோவில். இந்தக் கோவிலின் எதிர்புறம் மாநகராட்சி யோகா மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் சுவாமி சிலைகளும் வைக்கப்பட்டு தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தற்போது சுவாமி சிலைகளோடு சேர்த்து ஜெயலலிதா உருவப்படமும் செதுக்கப்பட்டுள்ளது. 8 டன் எடை கொண்ட ஒரு கல்லில் ஒருபுறம் காலபைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும், மறுபுறம் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்துக்கும், தங்கள் பகுதிக்கும் ஜெயலலிதா செய்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவரை தெய்வமாக வணங்கி வருவதாக தொண்டர்கள் கூறுகின்றனர்


யோகா மையத்தில் செதுக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு தினமும் காலையும், மாலையும் கற்பூரம் காட்டி தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.


உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பிறகும் தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் ஜெயலலிதா என்பதற்கு இதுவே சாட்சி.


Similar News