"வைரஸ் பரப்புகிறேன்" என்று பாதுகாவலரின் முகத்தில் இருமிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் - திடுக்கிடும் சம்பவம்!

"வைரஸ் பரப்புகிறேன்" என்று பாதுகாவலரின் முகத்தில் இருமிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் - திடுக்கிடும் சம்பவம்!

Update: 2020-04-03 05:09 GMT

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் (ஜே.என்.யூ) மாணவர் ஒருவர் ஊரடங்கு அமலில் உள்ள போது வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்காததால் பாதுகாப்புக் காவலர்களின் முகத்தில் இருமி   "கொரோனா வைரஸ் பரப்புவதாக" மிரட்டியதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.




 


அந்த அறிக்கையின்படி, பிரணவ் என அடையாளம் காணப்பட்ட மாணவர், 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது, வளாகத்திற்கு வெளியே செல்ல தேவையான பாஸ் இல்லாமல் வெளியேற முயற்சி செய்துள்ளார்.

அப்போது பாதுகாப்பு காவலர்கள் தடுக்க முயன்றபோது, பாதுகாவலர்களின் காலரை பிடித்து இழுத்தும், முகமூடியை விலக்கியும் முரட்டுத்தனமாக நடந்துள்ளார் அம்மாணவர். மேலும் மோதலின் போது பாதுகாவலர்கள் மீது இருமி  கொரோனா வைரஸை பரப்புவதாக அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாவலர்கள் மாணவர் மீது புகார் அளித்ததோடு, இந்த விவகாரம் குறித்து தில்லி போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News