ஜிகாதி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் பாலிவுட் பிரபலங்கள் இதற்கெல்லாம் குரல் கொடுப்பார்களா? காஷ்மீர் பண்டிட் படுகொலைக்கு நீதி கோரும் நடிகை கங்கனா ரனாவத்!

ஜிகாதி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் பாலிவுட் பிரபலங்கள் இதற்கெல்லாம் குரல் கொடுப்பார்களா? காஷ்மீர் பண்டிட் படுகொலைக்கு நீதி கோரும் நடிகை கங்கனா ரனாவத்!

Update: 2020-06-11 05:12 GMT

பல்கார் சாதுக்கள் படுகொலையின் போது மௌனமாக இருந்த பாலிவுட் பிரபலங்கள், Black Lives Matter இயக்கத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பி பாலிவுட் பிரபலங்களின் பாசாங்கு தனத்தை அமபலப்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

இது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்த அவர், காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் தாயகத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட மறைந்த காஷ்மீர் பண்டிட் சர்பஞ்ச் அஜய் பண்டிதாவிற்கும் நீதி கோரினார். 


பாலிவுட் பிரபலங்களின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்திய கங்கனா, இந்த 'மதச்சார்பற்ற' தாராளவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் "ஜிஹாதி விவகாரங்களுக்கு" மட்டுமே பதிலளிப்பார்கள் என்று கூறினார்.

மேலும், காஷ்மீர் பண்டிட் சர்பஞ்ச், அஜய் பண்டிதா கொல்லப்பட்டதை கண்டித்த அவர், கொடூரமான சம்பவத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாததற்காக, நடுநிலைவாதி பிரபலங்கள் என்று அழைக்கப்படுபவர்களை விமர்சித்தார்.

தாராளவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை இந்துக்களுக்குக் கற்பிக்கத் துணிகிறார்கள். இந்து மதம் என்பது அன்பைத் தவிர வேறொன்றையும் கற்பிக்காத ஒரு மதம். மற்ற மதங்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை இது கற்பிக்கிறது. இந்த பூமியில் உள்ள அனைத்தையும் எவ்வாறு வணங்குவது மதிப்புக்குரியது என்பதை இது கற்பிக்கிறது. இந்த தாராளவாதிகள் இந்துக்களுக்கு மதச்சார்பின்மை என்னவென்று கற்பிக்கிறார்கள் என்று கங்கனா கூறுகிறார்







Similar News