இந்தியாவையே விற்று விடுவார் ராஜீவ் காந்தி : கருணாநிதி பிரச்சாரம் - வைரலாகும் பதிவு

இந்தியாவையே விற்று விடுவார் ராஜீவ் காந்தி : கருணாநிதி பிரச்சாரம் - வைரலாகும் பதிவு

Update: 2018-12-18 17:07 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியின் போது, ஸ்வீடன் நாட்டிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் 1986ம் ஆண்டு, மார்ச்-24ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ₹1,437 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ₹64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெயரும் அடிபட்டது. இந்த ஊழல் தொடர்பாக போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்டின் அர்ட்போ, இடைத்தரகர் குவாத்ரோச்சி, சத்தா, ராஜீவ் காந்தி, பாதுகாப்பு செயலாளர் பட்நாகர், தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. இதில் பட்நாகர், சத்தா, ராஜீவ் காந்தி மரணடைந்துவிட்டனர்.



இந்த நிலையில் ஊழல் குறித்தும், ராஜிவ் இந்த நாட்டை விற்று விடுவார் என்ற மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் ஸ்டாலின் பேசுகையில்; நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக, இந்திராவின் மருமகளே வருக நல்லாட்சி தருக என கருணாநிதி அழைத்தார். இதுபோல் நான் தற்போது ராகுலே வருக நல்லாட்சி தருக என்றும் அழைக்கிறேன் என்றார்.
இந்த நேரத்தில் அணி மாறுவதும், வசைபாடுவதில் பழசை மறப்பதும் தி.மு.க-வுக்கு கைவந்த கலை என்ற வகையில் சமூக வலைதளங்களில் கேலி பேசப்படுகிறது. அதாவது கருணாநிதி 89-91ல் முதல்வராக இருந்தார். இந்நேரத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அவர் சென்னையில் நடந்த பிரசார இறுதி நாளில் ; " நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது போபர்ஸ் ஊழல். சாமானிய மக்களும் விமர்சிக்கும் வகையில் இந்த ஊழல் தெரிந்துள்ளது. ராஜிவ் பிரதமரானால் இந்த நாட்டை விற்று விடுவார். " இவ்வாறு கருணாநிதி பேசியுள்ளார். இந்த செய்தி தாளின் இமேஜ் வியூ மற்றும் இந்த பேச்சின் தேடல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/KUBR7235/status/1074881491534938113?s=19



https://twitter.com/Jatayu_G/status/1074189745243090947?s=19

Similar News