காஷ்மீரில் காங்கிரஸ் செய்த வரலாற்று பிழையால் ஆட்டம் காட்டிய ஆர்டிகிள் 370 - அதனால் என்னெவெல்லாம் நடந்தது.?

காஷ்மீரில் காங்கிரஸ் செய்த வரலாற்று பிழையால் ஆட்டம் காட்டிய ஆர்டிகிள் 370 - அதனால் என்னெவெல்லாம் நடந்தது.?

Update: 2019-08-05 06:56 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரைக்கும் அந்த சட்டத்தால் என்ன மாதிரியான அதிகாரத்தை எல்லாம் காஷ்மீர் மாநிலம் பெற்று வந்தது என்பது குறித்து பார்க்கலாம்.


சட்டப்பிரிவுகள் 370, 35ஏ சொல்வதென்ன?


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்தினால், காஷ்மீரிகள்தான் இந்தியாவின் செல்லக் குழந்தைகள் ஆகிறார்கள். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இந்து மன்னராக இருந்தாலும் தன் மக்கள்மீது ஹரிசிங் அளவற்ற பிரியம் கொண்டிருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காக சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள்.


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு அளித்து வந்த சிறப்பு உரிமைகள்:



இந்தியாவில், எங்கு வேண்டுமானாலும் காஷ்மீர் மக்கள் நிலம் வாங்கலாம். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொருந்தாது.

காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.

அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தர குடியேறிகளுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது.


Similar News