உலகிலேயே மிக உயரமான எரிமலையில் ஏறி சாதனை படைத்த கேரள அரசு ஊழியர்!

உலகிலேயே மிக உயரமான எரிமலையில் ஏறி சாதனை படைத்துள்ளார் கேரளா அரசு ஊழியர் ஒருவர்.

Update: 2024-01-21 17:30 GMT

உலகில் பலரும் பல்வேறு வகையான சாதனைகளை படைத்து தன்னை தனித்துவமாக காட்டிக் கொள்ளவும்  பிரபலமடையவும் விரும்புவார்கள். பல்வேறு மனிதர்களுக்கு மத்தியில் சிறப்பு வாய்ந்தவராகவும் சாதனையாளராகவும் காட்டிக்கொள்ள விரும்புவதில் பலருக்கு ஆர்வம் அதிகம். சாதனைகளுக்காகவும் பெயருக்காகவும் புகழுக்காகவும் வித்தியாசமான சிந்தனைகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்கள் ஏராளம் உண்டு. அப்படி ஒருவரைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். கேரளாவை சேர்ந்த மாநில அரசு ஊழியரான ஷேக் ஹஸன் கான் உயரமான மலைகளில் ஏறி தொடர்ந்து சாதித்து வருகிறார்.


எவரெஸ்ட், கிளிமாஞ்மாஞ்சாரோ, எல்ப்ரஸ்  போன்ற சிகரங்களில் ஏற்கனவே ஏரி சாதனை படைத்துள்ள அவர் கடந்த மாதம் அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான வின்சனில் கால் பதித்து இருந்தார். இதை தொடர்ந்து உலகிலேயே மிகவும் உயரமான எரிமலையான ஓஜோஸ் டெல் சலோடோவில் ஏரி சாதனை படைத்து இருக்கிறார். இது 22,615 அடி உயரம் கொண்டதாகும். பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மலையேற்றத்தை செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது பருவநிலை மாற்றம் உண்மையானது என்ற கோஷத்தை என் மார்பில் எழுதிக்கொண்டு ஓஜோஸ் டெல் சலாடோவின் உச்சியில் இன்று காட்டினேன் என தெரிவித்தார். மலை ஏற்றத்தில் தொடர்ந்து சாதித்து வரும் கேரள அரசு ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


SOURCE :DAILY THANTHI

Similar News