ஜப்பானை தொடர்ந்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் கொரிய நிறுவனங்கள் - இளைஞர்களுக்கு ஜேக்பாட்?

ஜப்பானை தொடர்ந்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் கொரிய நிறுவனங்கள் - இளைஞர்களுக்கு ஜேக்பாட்?

Update: 2020-04-16 11:29 GMT

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் வர்த்தகப் போரால் தென் கொரிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் சிலவற்றை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான ஆரம்பகட்ட பணிகளை சென்னையில் இருக்கும் கொரிய துணைத் தூதரகம் தற்போது மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான பல கோரிக்கைகள், சென்னையில் உள்ள தென் கொரிய தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளன. இதில் சில ஆரம்ப நிலையில் உள்ளது. மற்றவை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளன.


 



தென் கொரிய தூதரகத்தில் பணிபுரியும் யுப் லீ என்ற அதிகாரி கூறுகையில்,

இரண்டு இரும்பு தொழிற்சாலைகள், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சேவைத்துறையை சேர்ந்த நிறுவனம் ஒன்று சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தொழில்துவங்க விரும்புகின்றன. போஸ்கோ மற்றும் ஹூண்டாய் எக்கு தொழிற்சாலை, ஆந்திராவில் தொழிற்சாலை அமைப்பதை இந்தய அரசு எதிர்பார்க்கிறது.

ஆந்திராவில் எக்கு தொழிற்சாலை அமைக்க, துறைமுக வசதியுடன் கூடிய 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. முதலீடு செய்ய வேண்டும் என அந்த நிறுவனங்கள் முடிவெடுத்த உடன், ஆந்திராவில் தொழிற்சாலை துவங்கப்படும். இந்தியாவில், தொழில்துவங்க இன்னும் தென்கொரியாவை சேர்ந்த சில நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், கொரோனா காரணமாக அது தள்ளி போகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எச்டிஎப்சி வங்கி சேர்மன் தீபக் பரேக் கூறுகையில்,

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் வியட்நாம், தாய்லாந்து செல்வதற்கு பதில், இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான வழிகளை நாம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Similar News