அயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள்! குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில்: நினைவு கூறப்படும் கோத்தாரி சகோதரர்கள்! குடும்பத்தினர் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு!

Update: 2020-08-05 04:34 GMT

ராம ஜன்ம பூமி இயக்கத்தின் விளைவாக அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்ட அன்று அப்போதிருந்த முலாயம் சிங் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன ஆனால் அந்த துரோகத்தின் வடு இன்னும் இந்துக்களின் மனதில் மாறாமல் உள்ளது. அஞ்சு உயிர் தியாகம் செய்தகரசேவகர்கள் க்கு முறையாக இந்து சம்பிரதாயங்களின் படி இறுதிச்சடங்கு செய்ய கூட அனுமதிக்காத முலாயம் அரசு பல கரசேவகர்கள் உடலை புதைக்கும் சரயு நதியில் வீசியும் கொடூர செயலில் ஈடுபட்டது.

அத்தகைய ஈடில்லா தியாகங்களைச் செய்த கரசேவகர்கள் பற்றியும் இந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த கோத்தாரி சகோதரர்களைப் பற்றி இங்கு பார்ப்போம். கொல்கத்தாவைச் சேர்ந்த ராம பக்தர்களான சகோதரர்கள் ராம் கோத்தாரி, 22 வயது மற்றும் ஷரத் கோத்தாரி, 20 வயது‌, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஸ்வயம் சேவகர்கள் ஆக இருந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அழைப்பை அடுத்து ராமஜென்ம பூமி இயக்கத்தில் பங்கேற்க அயோத்தி சென்றனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட அவர்களின் குண்டுகள் துளைத்த உடல்கள் ஹனுமான்காரி கோவில் அருகில் உள்ள‌ ஒரு தெருவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.


"தங்களது தாய் நாட்டுக்காக இந்துக்களின் உணர்வுகளுக்காக ராம் லல்லாவிற்காக எனது சகோதரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால் அவரது அவர்களது தியாகத்திற்கு ஒரு‌ பலனும் இல்லை. கோவில் இன்னும் கட்டப்படவில்லை‌. மக்கள் எங்களை மறந்து விட்டார்கள். சில சமயங்களில் அவர்களது தியாகம் மீன் ஆகிவிட்டதோ என்று கூட எனக்கு நினைக்கத் தோன்றுகிறது" என்று கோத்தாரி சகோதரர்களின் சகோதரி பூர்ணிமா கோத்தாரி ஒருமுறை ஒரு பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்திருந்தார்.

"அவர்கள் இருவரும் வாரணாசி வரை மட்டுமே ரயிலில் சென்றதாகவும் அதன்பின்னர் கால்நடையாகவே அயோத்திக்குச் சென்று முதன்முதலாக ராமஜென்ம பூமியில் காவிக் கொடி நாட்டியது என் சகோதரர்கள் தான் என்று கேள்விப்பட்டேன்" என்றும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். கோத்தாரி சகோதரர்களின் தியாகத்தை சிறப்பிக்கும் விதமாக அவர்களது குடும்பத்தினர் ஆன பூர்ணிமா கோத்தாரி மற்றும் யஷஷ்வினி கோத்தாரி ஆகியோருக்கு ராமர் கோவில் அறக்கட்டளை பூமி பூஜை நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Similar News