கோவையில் மீண்டும் இயல்பு நிலை - மத நல்லிணக்க கூட்டம் நடத்த போலீசார் யோசனை!

கோவையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மத நல்லிணக்க கூட்டம் நடத்த முடிவு.

Update: 2022-10-05 03:23 GMT

கோவை நகரில் தற்பொழுது இயல்புநிலை திரும்பி உள்ளதால் பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட போலீஸ்சார் மீண்டும் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கோவை மாநகரில் செப்டம்பர் 22ஆம் தேதியும், 23ஆம் தேதியும் பெட்ரோல் குண்டு மீட்டு சம்பவம் மற்றும் பஸ் உடைப்பு சம்பவங்கள் நடந்தேறியது ஆறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பதற்றம் நிலவியதன் காரணமாக போலீசார் அதிவிரைவு படையினர் மாநகரில் அணிவகுப்பு நடத்தினார்கள்.


சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன், கோவைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். சம்பவம சம்பவம் நடந்த இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து ஆதாரங்களை திரட்டினார்கள். பெட்ரோல் குண்டு வீசும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SDPI மற்றும் PFI அமைப்பை சேர்ந்த 9 பெயர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று கூறுகையில், கோவை மாநகரில் கடந்த மாதம் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. கமாண்டோ படையினர் 100 பேர் உள்ளிட்ட 50 போலீசார் இதுவரை  அனுப்பப் பட்டுள்ளன. வரும் நாட்களில், அமைதியை பராமரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு தரப்பினர்கள் பங்கேற்கும் மத நல்லிணக்கம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கமிஷனர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News