முருகனின் வேல் வன்முறைக்கான ஆயுதம் - கே.எஸ்.அழகிரியின் திமிர்ப் பேச்சு.!
முருகனின் வேல் வன்முறைக்கான ஆயுதம் - கே.எஸ்.அழகிரியின் திமிர்ப் பேச்சு.!
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் கையிலிருக்கும் வேல் வன்முறையைத் தூண்டும் ஆயுதம் என்று கூறி முருகப்பெருமானின் பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பா.ஜ.கவின் வேல் யாத்திரையைப் பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சி வேல் யாத்திரை மட்டுமல்ல வாள் யாத்திரை சென்றாலும் எந்த மாற்றமும் கொண்டு வரப் போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பா.ஜ.கவை விமர்சிக்கும் ஆர்வத்தில் வேல் என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் வேல் ஒரு வன்முறை ஆயுதம் என்றும் எதிரிகளை வீழ்த்தி சாகடிக்கும் ஆயுதம் என்றும் மற்றவர்களை போருக்கு கூவி அழைக்கும் ஆயுதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் ஆக்ஸ்போர்டு அகராதியில் இதுபோல எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இணையதளங்களில் தேடிப்பார்த்தாலும் வேல் என்ற சொல்லுக்கு முருகக் கடவுள் கையில் இருக்கும் தெய்வீக ஈட்டி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முருகப் பெருமானையும் அவரது பக்தர்களையும் அவமானப்படுத்தும் இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும் இதற்கு கே.எஸ்.அழகிரி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்துக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் இந்துக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி ஒரு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முருகனின் கையில் இருக்கும் வேல் வன்முறை ஆயுதம் என்று கூறியுள்ளார்.
அதே போல் தி.மு.க பின்னணி உள்ள கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலைச் சேர்ந்தவர்கள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தி.மு.க இந்து விரோதப் போக்கில் தற்போதைக்கு அடக்கி வாசிக்கிறது என்று கருதப்பட்டாலும் தனது கூட்டணிக் கட்சியினரை ஏவி விட்டு தொடர்ந்து இந்து விரோதப் பேச்சுக்கள், செயல்களில் ஈடுபடச் செய்து வருகிறது தி.மு.க. இந்து தீவிரவாதம் என்ற சொல்லாடலை அடிப்படை ஆதாரமின்றி தோற்றுவித்ததே காங்கிரஸ் கட்சி தான் எனும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இவ்வாறு பேசி இருப்பது ஆச்சரியமல்ல.