"ஏன் மேன் கலைஞரை அசிங்கபடுத்துற?" - உடன்பிறப்பை கலாய்த்த குஷ்பு.! #Kushboo #DMK

"ஏன் மேன் கலைஞரை அசிங்கபடுத்துற?" - உடன்பிறப்பை கலாய்த்த குஷ்பு.! #Kushboo #DMK

Update: 2020-07-30 14:52 GMT

நடிகை குஷ்பு தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். மனதில் பட்டதை சரியோ, தவறோ கட்சி பேதம் பார்க்காமல் கூறிவிடுவதில் குஷ்பு சிறந்தவர் அந்த வகையில் இன்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "சிறப்பான திட்டம்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார் அதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் உடன்பிறப்புகளோ வேறு விதம் இல்லையா? கட்சி தலைவரே வந்து மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அவரையும் ஒருமையில் திட்டும் அளவிற்கு தற்பொழுது பரிணாம வளர்ச்சியில் இருப்பவர்கள் தி.மு.க உடன்பிறப்புகள்.



அந்த வகையில் குஷ்புவின் கருத்துக்கு ஒரு தி.மு.க ஆதரவு நபர்

"இருக்குற கட்சிக்கு உண்மையா இருப்பது இல்லை..இதனால் தான் கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருப்பது" என்று பதிவிட்டிருந்தார் இதில் சிறப்பம்சமே கருணாநிதி'யின் முகப்பு படம்தான்.

உடனே குஷ்பு சற்று கூலாகவே "உங்கள் டி.பியில் உள்ள பெரிய மனிதரை Pls அவமதிக்க வேண்டாம்" என அசால்ட்டாக டீல் செய்தார். வேறு என்ன வழக்கம்போல் குஷ்பு பெயரில் அர்ச்சனை செய்ய ஆரமித்துவிட்டனர் உடன்பிறப்புகள்.



Similar News