சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் - வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசக அறிவிப்பு!

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் - வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசக அறிவிப்பு!

Update: 2020-07-08 13:18 GMT

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசகமாக தெரிவித்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், ஒன்றை மட்டும் நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். உலகத்தில் சீனாவோ, மற்ற நாடுகளோ தாங்கள் தான் சக்திவாய்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு, பிற நாடுகளின் மீது அடக்கு முறையை ஏவி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க மாட்டோம். உலகின் எந்த இடமாக இருந்தாலும் இதை அனுமதிக்க மாட்டோம்.

சீனாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால்  இந்தியா பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும். அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வலுவாக நிற்கும் என்பதை உறுதிபடுத்துகிறோம்.

முன்னதாக தெற்கு சீன கடல் பகுதிக்கு, இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. உலகிலேயே அமெரிக்காதான் இன்னும் வலுவான சக்தி என்பதை உலகம் அறிந்து கொள்வதற்காக நாங்கள் இதை செய்கிறோம்.

அமெரிக்க ராணுவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நிறைய முதலீடு செய்துள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் தினந்தோறும் தியாக உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.


Similar News