பிரதமர் நரேந்திர மோடிக்கு போலந்து நாட்டை சேர்ந்த 11 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு போலந்து நாட்டை சேர்ந்த 11 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!!

Update: 2019-06-04 07:20 GMT


போலந்து நாட்டை சேர்ந்த 11 வயது சிறுமி அலிக்ஜா வனாட்கோ. இவர் தனது தாய் மார்தா கோட்லார்ஸ்கா உடன் கோவா மாநிலத்தில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கி இருந்ததாக தாய் மார்தாகோட்லார்ஸ்கா நாடு கடத்தப்பட்டார். தொடர்ந்து சிறுமியை அழைத்து செல்வதற்காக தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 24 - ஆம் தேதி சிறுமி தனது தாயுடன் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். 





இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதை தொடர்ந்து சிறுமி அலிக்ஜா வனாட்கோ மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் சிறுமி சிறுமி அலிக்ஜா குறிப்பிட்டு இருபதாவது : - 





கோவாவில் நான் பயின்ற எனது பள்ளியை நேசிக்கிறேன். நான் பசுவை கவனித்துக்கொள்வதில் உதவி செய்யும் விலங்கு மீட்பு மையத்தில் எனது தன்னார்வ சேவையை இழந்து விட்டேன். 2019 - ஆம் ஆண்டு மார்ச் 24 - இல் நாங்கள் மீண்டும் இந்தியாவில் நுழைய முடியாதபடி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம். நான் இப்போது என் அம்மாவுடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு பிடித்த இந்தியாவில் எனது பழைய வாழ்க்கையை என்னால் வாழ முடியவில்லை, நான் அறிந்த எல்லாவற்றிலிருந்தும் தனியாக உணர்கிறேன். 





இவ்வாறு சிறுமி சிறுமி அலிக்ஜா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்


மேலும் சிறுமியின் தாய் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில், “எனது மகள் வரும் ஆண்டு பள்ளிப்படிப்பை பற்றி  கவலையாக உள்ளாள். நீங்கள்தான் எங்களின் ஒரே நம்பிக்கை. நாங்கள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்கின்றோம். நீங்கள் எங்களுக்கு உதவக்கூடிய சக்தி வாய்ந்த நபராக இருப்பதால், எங்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும்."
என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கும் கடிதம் எழுதி உள்ளார்.


இந்த கடிதத்தினை அவரது தாய் மார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மழலை கையெழுத்தில் அந்த கடிதம் படிப்பவர்களை நெகிழச்செய்துள்ளது.


Similar News