நம் நாட்டின் தேசிய விலங்கிற்கு பெயர் பெற்ற 'புலிகள் மாநிலம்' என்ற அந்தஸ்தை இழக்கிறது மத்திய பிரதேசம் - கர்நாடகா முன்னிலை
ஒரே ஆண்டில் 34 புலிகள் மரணம் அடைந்துள்ளன.இதனால் புலிகள் மாநிலம் என்ற அந்தஸ்தை இழக்கிறது மத்திய பிரதேசம். கர்நாடகா முன்னிலை வகிக்கிறது.
மதிய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் புலிகளை கணக்கெடுத்து வருகிறது. அந்த கணக்கெடுப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் புலிகள் அதிகமாக உள்ள மத்திய பிரதேசத்தில் 34 புலிகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
புலிகள் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ள கர்நாடகாவில் 15 புள்ளிகள் இறந்துள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மத்திய பிரதேசத்தில் 526 புலிகளும் கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்தன. சிறிய வித்தியாசத்தில் நாட்டின் புலிகள் மாநிலம் என்ற அந்தஸ்தை மத்திய பிரதேசம் தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் கர்நாடகாவை விட இரு மடங்கு அதிகமான புலிகள் இறந்திருப்பதால் புலிகள் மாநிலம் என்ற அந்தஸ்தை மத்திய பிரதேசம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அதை கைப்பற்றுகிறது. மத்திய பிரதேசத்தில் அதிகமான புலிகள் இறந்திருப்பது மர்மமாக இருப்பதாக மாநில வனத்துறை கூறியுள்ளது.