மதுரை மாநகராட்சியின் திட்டத்தை தனது திட்டமாக மார்தட்டிக்கொள்ளும் மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் - அம்பலமான உண்மை!

மதுரை மாநகராட்சியின் திட்டத்தை தனது திட்டமாக மார்தட்டிக்கொள்ளும் மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் - அம்பலமான உண்மை!

Update: 2020-04-02 06:54 GMT

மதுரையில் மாநகராட்சி அறிமுகப்படுத்திய திட்டத்தை, கம்யூனிஸ்ட் எம்.பி அறிமுகப்படுத்தியதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் 16 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை 200 ரூபாய் விலையில் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தொகுப்பில் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கேரட் உள்ளிட்ட காய்களும், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிக்கு உட்பட்ட 10 வார்டுகளில், நடமாடும் வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பணியில் தன்னார்வலர்கள், பெட் கிராப் நிறுவனத்தினர் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, காய்கறி தொகுப்பு பையினை வாங்க வேண்டுமென, மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் அறிவித்ததாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு கம்யூனிஸ்டுகள் கொள்கையை விட்டு விளம்பரத்தின் பின் சென்றுவிட்டார்களா என்று சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 




 


Similar News