கொரோனாவை எதிர்த்துப் போராட ஆயுர்வேதத்திற்கு நோ.! யுனானிக்கு எஸ்.! மகாராஷ்டிரா அரசின் இரட்டைவேஷம்.! #Maharashtra #Ayurvedha

கொரோனாவை எதிர்த்துப் போராட ஆயுர்வேதத்திற்கு நோ.! யுனானிக்கு எஸ்.! மகாராஷ்டிரா அரசின் இரட்டைவேஷம்.! #Maharashtra #Ayurvedha

Update: 2020-07-05 06:52 GMT

 'கொரோனில்' என்பது கொரோனா மருந்து எனக் காட்டி மக்களை தவறாக வழிநடத்தியதாகப் பதஞ்சலி நிறுவனம் மீது மகாராஷ்டிரா அரசு குற்றம் சாட்டி, அச்சுறுத்தும் அதே வேளையில், அதே மாநிலத்தின் சில நகராட்சிகள் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு தீர்வாக "யுனானி கதா" என்ற யுனானி சாற்றை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன.

மாலேகானில் கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதில் "யுனானி கதா" 'வெற்றியடைந்ததாகவும்' மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் இந்த சாற்றைப் பயன்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக நகராட்சி ஆணையர் அஜீஸ் ஷேக் தெரிவித்தார்.

மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக துலே முனிசிபல் கார்ப்பரேஷன் "யுனானி கதா" தயார் செய்து வருகிறது. நகரில் அதிகபட்ச குடிமக்களுக்கு கதா வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நகராட்சி ஆணையர் மேலும் தெரிவித்தார்.

மாலேகானில் உள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் கதுன் கல்வி சங்கத்தின் அல்-அமீன் யுனானி மருத்துவக் கல்லூரியின் உதவியுடன், மாலேகானின் RMS இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மசி உடன், துலே மாவட்ட நீதிமன்றப் பணியாளர்களுக்கு "யுனானி கதா" விநியோகிக்கப்பட்டது. யுனானி கல்லூரியின் தலைவர் ரிஸ்வான் ஷேக், கதா சாற்றைக் கோரினால் நகரத்தின் பிற நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது நிர்வாக அமைப்புகளுக்கு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

துலேவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட நீதிமன்ற ஊழியர்களுக்கு "யுனானி கதா" வழங்கப்பட்டபோது பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நீதிபதி சையத், மாவட்ட நீதிபதி ஷேக், டாக்டர் டோங்ரே உட்பட.

ராஜஸ்தானிலும் கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஊக்கியாக பாரம்பரிய உருவாக்கம் கதா ஊக்குவிக்கப்படுகிறது. கடந்த மாதம் மாநில ஆயுஷ் மற்றும் சுகாதார அமைச்சர், மார்ச் முதல் ஜூன் வரை மாநிலத்தில் சுமார் 18 லட்சம் பேருக்கு இதுபோன்ற கதா வழங்கப்படுவதாகவும், இன்னும் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

இது பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்புக்கு முற்றிலும் முரணானது. மகாராஷ்டிரா அரசாங்கம் வெள்ளிக்கிழமை பாபா ராம்தேவின் அமைப்பான பதஞ்சலிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.

"பதஞ்சலி மக்களை தவறாக வழிநடத்தவும் குழப்பத்தை உருவாக்கவும் முயன்றால், நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக 1954 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் மேஜிக் வைத்தியம் (ஆட்சேபகரமான விளம்பரங்கள்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மகாராஷ்டிரா FDA அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பதஞ்சலி தயாரித்த மருந்தை "நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்று விளம்பரம் செய்யலாம் என்று மகாராஷ்டிரா அரசு கூறியது.

மகாராஷ்டிரா அரசாங்கம் பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரித்த மருந்துப் பொருளை மட்டம் தட்டி வரும் போது, அதே ​​மாநிலத்தின் பல்வேறு நகராட்சி நிறுவனங்களில் அதன் சொந்த ஊழியர்கள் "யுனானி கதா" போன்ற நிரூபிக்கப்படாத மற்றும் சோதிக்கப்படாத கஷாயங்களைப் பயன்படுத்துவதை தீவிரமாக ஆதரித்து வருகின்றனர். முரண்.

Similar News