திருமலையில் களைகட்டிய பரிணய உற்சவம் - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருமலையில் பரிணய உற்சவத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் பரிணய உற்சவத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
கலியுகத்தின் துவக்கத்தில் திருமலை திருப்பதிக்கு வருவதற்கு முன் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றன, அதை நினைவுபடுத்தும் விதமாக திருமலையில் ஆண்டுதோறும் பத்மாவதி பரிணயம் உற்சவம் நடத்தப்படுகிறது. இதற்காக நேற்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.
இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவை சேவையில் தம்பதி சமேதராய் உற்சவமூர்த்திகள் அருள்பாலித்தனர், மேலும் கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது. சுவாமியை தரிசனம் செய்ய 8 மணி நேரம் ஆகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.