மோடியைக் குறிப்பிட்டு மலேசிய இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே கலவரப் பேச்சு: ஸாகிர் நாயக் மீது மலேசிய தலைவர்கள் பாய்ச்சல் !!

மோடியைக் குறிப்பிட்டு மலேசிய இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே கலவரப் பேச்சு: ஸாகிர் நாயக் மீது மலேசிய தலைவர்கள் பாய்ச்சல் !!

Update: 2019-08-14 06:13 GMT


மதக்கலவரங்களைத் தூண்டும் வன்முறைப் பேச்சு, ஹவாலா தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிக்கி இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியவர் ஸாகிர் நாயக். இந்தியாவின் புகாரின்பேரில் பல நாடுகளிலிருந்தும் அவர் துரத்தியடிக்கப்பட்டு தற்போது மலேசியாவில் வேண்டா விருந்தாளியாக உள்ளார்.


இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஸாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். 


இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இப்போது மலேசியா பெற்றிருக்கும் சிறப்புகளுக்கு இந்திய சமூகத்தினர் அளித்த அளப்பரிய பங்களிப்பும் தியாகமும் காரணம்.  “எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி அவர்களை அவமதிக்கும் வகையில் ஸாகிர் நாயக் கருத்து வெளியிட்டுள்ளார்.


மலேசியாவில் உள்ள கோத்தாபாரு என்ற இடத்தில் அண்மையில் உரை நிகழ்த்திய ஸாகிர் மலேசியாவில் இருக்கும் இந்துக்களை இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டது.


இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் மலேசியாவில் இருக்கும் இந்துக்கள் நூறு விழுக்காடு உரிமைகளை அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவித்தன. அத்துடன் மலேசியாவில் உள்ள இந்துக்கள் பிரதமர் மகாதீர் முகமதுவைக் காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது அதிக அன்பு செலுத்துவதாக நாயக் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


மேலும், ஸாகிர் ஒரு அழையா விருந்தாளி என்றும் ஸாகிரின் தீவிர கருத்துகள் நாட்டின் இன, சமய உறவுகளுக்கு மிரட்டலாக இருந்தாலும் வேறு எந்த நாடும் அவரை ஏற்கத் தயாராக இல்லை என்பதால் மலேசியாவிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது கடினமாக உள்ளது என்றும் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Similar News