தாய் இறந்ததுக்கு செல்லாமல் மருத்துவ பணி செய்த ஆண் செவிலியர்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்..

தாய் இறந்ததுக்கு செல்லாமல் மருத்துவ பணி செய்த ஆண் செவிலியர்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்..

Update: 2020-04-08 07:04 GMT

ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் ஆண் செவிலியராக வேலை பார்ப்பவர் ராமமூர்த்தி மீனா. அவருடைய மனைவியும் குழந்தையும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 103 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக ராமமூர்த்தி அவருடைய வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமமூர்த்தியின் தாய் போளிதேவி அவருக்கு 93 வயதாகிறது. அவர் சென்ற மார்ச் 30ம் தேதி காலமானார். இந்த தகவலை ராமமூர்த்திக்கு தெரிவிக்கப்பட்டன.  


தன்னுடைய தாயை இழந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதை மேற்கொண்டார். ராமமூர்த்தியின் தந்தை மற்றும் உடன் பிறந்த மூன்று சகோதரர்களையும் தொடர்பு கொண்டு தாயின் இறுதிச் சடங்குகளை நீங்களே நல்ல படியாக முடித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். தாயின் இறுதி சடங்கை ராமமூர்த்தியின் சகோதரர் முன்நின்று நடத்தி விட்டு வீடியோவை அவருக்கு அனுப்பி உள்ளார்.

இதனைப்பற்றி ராமமூர்த்தி நிருபர்களிடம் பேசுகையில்: என் தாய் இறந்தது மிக தூக்கமானது. ஆனால் நான் வேலை செய்யும் கொரோனா வாா்டில் பல பேர் உயிருக்காக போராடி வருகிறார்கள். நாடு முழுவதும் தற்போது இருக்கும் நிலையில் நாம் அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். இதனை மனதில் நினைத்து என் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லாமல் நோயாளிகளைக் காப்பாற்ற நினைத்தேன் என கூறினார்.

Source: https://www.dinamani.com/india/2020/apr/08/male-nurse-3396411.html

Similar News