புதுச்சேரியில் குடிநீர் பாட்டிலில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவர் கைது.!

புதுச்சேரியில் குடிநீர் பாட்டிலில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவர் கைது.!

Update: 2020-04-11 04:48 GMT

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் கள், சாராய கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை கள்ளத்தனமாக சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனிடையே சட்டத்துக்கு புறம்பாக மதுபாட்டில்கள் மற்றும் சாராய விற்பனையை தடுக்க புதுச்சேரி கலால்துறை சார்பில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி, தேங்காய்த்திட்டு பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒருவர் குடிநீர் பாடலில் சாராயத்தை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தேங்காய்த்திட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(52) என்பது தெரியவந்தது.


பின்னத் அவரிடம் இருந்து 8 லிட்டர் அளவு கொண்ட சாராய பாட்டில்கள், சாராயம் விற்பனை செய்த பணம் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆறுமுகத்தை கைது செய்த போலீஸார் சாராய பாட்டிகளுடன் சேர்த்து அவரை கலால்துறையில் ஒப்படைத்தனர்.

Similar News