மது பாட்டில் வைத்திருந்ததால் கைதானவர் - அரசு பள்ளிக்கு ரூபாய் பத்தாயிரம் செலுத்தும் படி மதுரை ஐகோர்ட் உத்தரவு

மது பாட்டில் வைத்திருந்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அரசு பள்ளிக்கு 10,000 செலுத்த வேண்டும் என்று மதுரைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-02-10 06:00 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மனக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.அனுமதி இன்றி மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார் அப்போது திருப்பனந்தாள் போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு சிவகுமார் மதுரை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார் . இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 10,000 செலுத்த வேண்டும்.


மறு உத்தரவு வரும் வரை உரிய போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து அவருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.





 




Similar News