காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து ஆயிரம் லிட்டர் டீசலை திருட்டு, என்று திருந்துவார்களோ ?

காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து ஆயிரம் லிட்டர் டீசலை திருட்டு, என்று திருந்துவார்களோ ?

Update: 2020-04-10 05:11 GMT

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களது 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள்.


இந்நிலையில் மதகடி அருகே ஒருவரது வீட்டில் அதிக அளவு டீசல் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பெரியளவிலான பேரல்களில் ஆயிரம் லிட்டர் டீசல் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து டீசலை பதுக்கி வைக்கப்படிருந்த வீட்டின் உரிமையாளர் சூரியகாந்தி என்பவரை பிடித்து விசாரித்தபோது காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் இருந்து டீசல் திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னத் ஆயிரம் லிட்டர் டீசலை பறிமுதல் செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சூரியகாந்தியை கைது செய்தனர் மேலும் நான்கு போரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News