ஏழாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் மனிதன் : நாசாவின் அடுத்த திட்டம் ரெடி

ஏழாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

Update: 2023-07-07 06:00 GMT

அமெரிக்காவின் ஃபபுளோரிடா மாகாணத்தில் அமெரிக்க விண்வெளி நிலையமாக நாசா செயல்படுகிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் மற்றும் மனிதர்களை அனுப்புவதில் இது முதன்மை பங்கு வகிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆறு முறை நாசா மூலம் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து அதன் ஏழாவது முறை பயணத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய ப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அடுத்த மாதம் ஒரு குழு செல்ல உள்ளது. இந்த குழுவில் நாசாவின் ஜாஸ்மின், ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென் சென் மற்றும் ஜப்பானின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் அனுப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


SOURCE:DAILY THANTHI


Similar News