ராமாயணத்திலிருந்து கார்ப்பரேட் உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் (பகுதி – 1)

ராமாயணத்திலிருந்து கார்ப்பரேட் உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் (பகுதி – 1)

Update: 2019-11-08 04:17 GMT

இந்திய தேசத்தின் பழம்பெரும் இதிகாசமான
இராமாயணத்தில் இன்றைய கார்ப்பரேட் உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய
உள்ளன.


நம்பிக்கையூட்டுங்கள்


இன்றைய சூழலில் அவசியமாகவும் முதன்மையாகவும்
தேவைப்படுவது பணியாளர்களின் திறனை அதிகரிக்கும் தன்னம்பிக்கையூட்டும் முளு இதைச்
செய்வது எளிதானது என்று நினைக்கலாம். ஆனால் யாரிடம் என்ன திறமை இருக்கிறது அதை
எப்படி எந்த வேலைக்கு பயன்படுத்திக் கொள்வது என்ற அறிவும் சரியான எண்ணங்களை
வார்த்தைகளால் பேசி உற்சாகமூட்டும் தகுதியும் உள்ளவர்களால் மட்டுமே இது முடியும்.


ராமாயணத்தில் சீதை இலங்கையில் இருக்கிறார் என்ற
செய்தியை அறிந்தவுடன் கடலைத் தாண்டி யார் செல்வது என்ற விவாதம் ஏற்படுகிறது.
அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக்கொண்டிருந்தனர் யாரும் கடலைத் தாண்டிச்சென்று, பின்
திரும்பி வரும் அளவிற்கு வலிமை உள்ளவர்களாக இல்லை. அப்போது ஜாம்பவான் அவர்கள்
தனிமையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரிடம் சென்று ஆஞ்சநேயரிடம் புதைந்திருக்கும்
ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில், அவரை பற்றிய உண்மையை மற்றும் உயர்வான எண்ணங்களை
அவரிடத்திலேயே உயர்வாக சொல்லி  அவரை
உற்சாகப்படுத்தினார்.


அதன் பின், அனுமன் மிக நீண்ட கடலைத் தாண்டிச்சென்றதும்
அதன் பின்  பின் அவர் செய்த சாகசங்களின்
பெருமையும்  அவரை உற்சாகப்படுத்திய
ஜாம்பாவனையே சாரும்.


கள ஆய்வு


இரண்டாவதாக திறன் அறிதல் என்பது மிக முக்கியமானது
அனுமன் இலங்கையில் வந்து இறங்கிய உடன் முதலில் சிறு வடிவம் எடுத்து  இலங்கையை வலம் வந்து கண்காணித்தார். மக்கள்
வசிப்பிடங்கள், அவர்களின்
பலம், பலவீனம்
வெற்றிக்கான வாய்ப்புகள்,
ஆபத்துகள்
போன்றவற்றை தெளிவாக ஆராய்ந்து பகுப்பாய்வை தெளிவாக செய்ததாலேயே
அவரால் அவருடைய பணியை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.


திறனறிதல்/உறவுகளை மேம்படுத்தல்


துணை சேர்த்தல் என்பது நிர்வாகத்தை நடத்துவதில்
முக்கிய பங்காற்றுகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது ஒரு மிகச் சிறந்த யுத்தியாக
நிர்வாக நகர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. ராமாயணத்தில், இந்த யுத்தியை பயன்படுத்தி, சுக்ரீவன்
தன்னை
விட வலிமையான வாலியை  வீழ்த்தினான்.
அது மட்டுமல்ல தன் அண்ணன் மகனான அங்கதனின் திறன் அறிந்து அவனையே
தனக்காக
போரிடவும் செய்தான்.
இந்தத் தந்திரம் சுக்ரீவனிடம் இல்லாது போயிருந்தால் அவனுக்கு எதிராக திரும்பி இருக்கும்.
எனவே திறனறிவதிலும், உறவுகளை மேம்படுத்துவதிலும்  மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.


பின்னூட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல்


அறிவுரைகளை/பின்னூட்டங்களை பரிசீலித்தல்
என்பது எந்த நிர்வாகத்திற்கு அவசியமானது. தனக்கு கீழ் இருப்பவர்கள் ஆனாலும் அறிவுரைகளை பரிசீலிப்பது
என்பது மிக முக்கியமானது.
ராவணன் தன் தம்பிகள் அறிவுரையை முற்றிலுமாக புறக்கணித்ததன்
தவிளைவாக தனக்கான வீழ்ச்சியை தேடிக்கொண்டான். ஆனால்
ராமனோ விபீஷணனை ஆதரித்து தன்னோடு சேர்த்துக் கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டார்.


தலைமைப்பண்பு


ஒரு நல்ல தலைவன் தனக்கு கீழே நிறைய தலைவர்களை
உருவாக்கும் தகுதி உடையவனாக இருக்கவேண்டும். ராமன் தன்னிகரற்ற
தலைவன் என்றாலும் சுக்ரீவன், லட்சுமணன், அனுமன் ஏன் விபிஷணனுக்கு கூட தனக்குள் இருக்கிற
தலைமைப்பண்பை கடத்தி அவர்களையும்
தனிப்பட்ட வகையில் தலைவரகா உருவாக்கி தான் ஒதுங்கி நின்று அவர்களை
தலைவராக .செயல்பட வைத்தார்


Similar News