பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும்தான்: நிர்மலா சீத்தாராமன்.!

பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும்தான்: நிர்மலா சீத்தாராமன்.!

Update: 2019-10-16 10:23 GMT


அமெரிக்காவுக்கு சென்ற நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்குள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:


மண் மோகன் சிங் பிரதமராக இருந்த போது நாடு மிக நெருக்கடியான பொருளாதார சூழலை சந்தித்துக் கொண்டிருந்தது. அப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் மிகச்சிறந்த நிபுணர். அவர் மீது எனக்கும் மரியாதை உண்டு.


ஆனால் அவர் பதவி வகித்த காலத்தில் தான் மிகப்பெரிய முதலாளிகளும், அரசியல் தலைவர்களும் தொலைபேசியில் சொன்னால் கூட போதும் உடனே வங்கிகள் கடன் கொடுக்கும் சூழ்நிலை இருந்தது. இந்த காரணத்தினால்தான் பொதுத்துறை வங்கிகள் இன்றளவும் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தவிக்கின்றன.


அதேபோல் இந்தியப் பொருளாதாரத்தை மிகச்சிறந்த பாதையில் கொண்டு சென்றவர் சென்றவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் பொருளாதார அறிவு நிரம்ப பெற்றதாக அறியப்பட்ட மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தான், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது தான் மிக மோசமான அளவில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பதவி வகித்த நேரத்தில் இந்த பிரச்சினை பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தது.


ஆனால் அவர்களது காலத்துக்கு பிறகு இந்த பிரச்சினை பொதுத்துறை வங்கிகளை பெரிதும் பாதித்துள்ளன. இந்த பாதிப்புகளுக்கேல்லாம் காரணம் இந்த இரண்டுபேரும் தான். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Similar News