மசூத் அசாரை பஹவல்பூரில் பாதுகாப்புடன் மறைத்து வைத்துள்ளது அம்பலம்!! பொய் சொன்ன பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவு!

மசூத் அசாரை பஹவல்பூரில் பாதுகாப்புடன் மறைத்து வைத்துள்ளது அம்பலம்!! பொய் சொன்ன பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவு!

Update: 2020-02-18 12:28 GMT

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் 10 லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர். இதுபோன்ற பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பயங்கரவாத நிதி, பணமோசடி மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் ஆகியவையின் கீழ் மொத்தம் 29 வழக்குகளை பதிவு செய்தது பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறை. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு வழக்குகளில் ஐந்தரை ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் மசூத் அசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பன்னாட்டு உலக பயங்கரவாத தடுப்பு அமைப்பான FATF நிம்மதி தெரிவித்தது. அடுத்த மாதம் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியே வர வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், தற்போது, பாகிஸ்தான் மீண்டும் நாடகம் ஆடத்தொடங்கியுள்ளது. இப்போது அசாரைக் குடும்பத்துடன் காணவில்லை என பாகிஸ்தான் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இன்னும் பாகிஸ்தான் திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக FATFதெரிவித்துள்ளது.

இருப்பினும், நவீன தகவல் தொழில் நுட்பப்படி ஒருவரின் இருப்பிடத்தை அறியும் இன்டெல் உள்ளீடுகள் தகவல்படி மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கராச்சி செல்லும் சாலையில் உள்ள பஹவல்பூரில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். புதிய ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகமான மார்க்காஸ் உஸ்மான்-ஓ-அலி என்ற இடத்தில் மசூத் அசார் வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மசூத் அசார் பஹவல்பூர்-கராச்சி சாலையில் உள்ள ஜெய்ஷ் தலைமையகத்தில் பலத்த பாதுகாப்பு முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அங்கிருந்தபடியே மசூத் அசார் அருகே கைபர் பக்துன்க்வாவில் உள்ள தனது வீடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதாகவும் ஆஜ் தக் செய்தி நிறுவன ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாத நிதியுதவிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான FATF இன் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பாகிஸ்தான் பின்பற்றியுள்ளதா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான FATF கூட்டம் பாரீசில் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் பொய் கூறியதற்கு காரணம் தங்களுக்கு மீண்டும் தடை ஏற்பட்டால் அயல் நாடுகள் மற்றும் ஐ.நா.சபையிடமிருந்தும், அமெரிக்காவிடமிருந்தும் நிதி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் என்றும், அதனால்தான் உண்மையை மறைத்து பொய் கூறுவதாகவும், இது பாகிஸ்தானின் வழக்கமான ஏமாற்று குணம்தான் எனவும் FATF அதிகாரிகள் கூறினார்.

மேலும் பாகிஸ்தானின் நாடகம் அம்பலமாகினால், அந்நாடு "கருப்புப் பட்டியலில்" சேர்க்கப்படும். அப்படி சேர்க்கப்பட்டு விட்டால், அதன் பிறகு அவர்களின் நட்பு நாடான சீனாவாலும், அவ்வப்போது ஆதரவளிக்கும் அமெரிக்காவாலும் பாகிஸ்தானுக்கு ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளிக்க முடியாது. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் சர்வதேச அளவில் தலைக்குனிவை சந்திக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Similar News