பால், உணவு பொருள்கள் விலை உயர்வு - பரிதவிக்கும் லண்டன் மக்கள்
லண்டனில் உணவுப்பொருட்கள் கடும் விலையேற்றம் துவங்கியுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
லண்டனில் உணவுப்பொருட்கள் கடும் விலையேற்றம் துவங்கியுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வல்லரசு நாடான இங்கிலாந்தில் தற்போது பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலையற்றத்தினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் லண்டனில் அறக்கட்டளை மூலமாக உணவு வங்கி ஏற்பாடு செய்து ஏழைகள் முதியோர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
முன்பதிவு செய்து உணவு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கடந்த ஆண்டில் நிதி உதவி வழங்கியவர்கள் கூட தற்போது உதவி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் உணவு வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடான லண்டனுக்கே இந்த நிலையா என உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.