'மின்மினி'- உலகத் தமிழர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்த புதிய சமூக ஊடக செயலி!
உலகத் தமிழர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மின்மினி சமூக ஊடக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக மின்மினி என்ற சமூக ஊடக செயலி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்மினி சமூக ஊடக செயலியின் நிர்வாக துணை தலைவர் எஸ். ஸ்ரீராம் கூறியதாவது :-
மின்மினி சமூக ஊடக செய்தியில் பயனர்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம் .மேலும் மற்ற செயலிபயனார்களுடன் தடை இன்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். மின்மினிக் குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி சேனல் நெட்வொர்க் களை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட் களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.
இதுவரை சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன் டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மின்மினியில் அங்கீகாரம் என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை .மாறாக கன்டென்ட் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் நீல நிற டக் மூலம் அடையாளம் காணப்படுவார்கள். எனவே பயனர்கள் நம்பகமான கன்டன்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.
காலப்பகுதியில் இந்த தளத்தில் மற்றொரு பயனர்களுடன் தகுதியான கன்டென்டுகளை பகிர்ந்து அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயணங்கள் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள் என மேம்படுத்தப்படுவார்கள். மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு மின்மினி கடைகள் என்ற அங்கீகாரம் கடைகளுக்கு வழங்கப்படும். அந்த கடைகள் டிஜிட்டல் தொழிலுக்குள் கொண்டுவரப்பட்டு மின்மினி செயலிலும் சேர்க்கப்படுகிறது.