பெண் என்ற "கிலேமரால்" ஆட்சி நடந்தது : மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதாவை இகழ்ந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்

பெண் என்ற "கிலேமரால்" ஆட்சி நடந்தது : மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதாவை இகழ்ந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்

Update: 2019-02-24 18:38 GMT

பொதுவாக மறைந்த தலைவர்களை விமர்சிப்பதோ அல்லது இழிவாக பேசுவதோ இந்திய அரசியலில் தலைவர்கள் யாரும் செய்யாத ஒன்று. ஆனால் இந்த நாகரிகம் எதுவும் தெரியாத திராவிட தலைவராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வளர்ந்துவிட்டார் போல் தெரிகிறது.


தி.மு.க தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் கிராம சபை என்ற பெயரில், கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், கிராம சபை கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள், மறைந்த முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை மிகவும் கீழ் தரமாக இகழ்ந்து பேசியுள்ளார்.


ஜெயலலிதா அவர்கள் பெண் என்பதால், "கிலேமரால்" ஆட்சி நடந்தது என்று கூறியுள்ளார். அவர் பேசிய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




https://twitter.com/HLKodo/status/1099303048386473989?s=19


இதற்கு அரசியல் தலைவர்களும் விமர்சகர்களும், பெண்களும் தங்களது கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.


பா.ஜ.க மாநில இளைஞர் அணி துணை தலைவர் திரு எஸ்.ஜி. சூர்யா பதிவிடுகையில், "தனது 2 வயதில் தந்தையை இழந்தார். தாயை 23 வயதில் இழந்தார். தனது வழிகாட்டியை 39 வயதில் இழந்தார். தன்னந்தனியாக போராடி, 43 வயதில் முதல்வர் ஆனார். ஆனால், ஸ்டாலின் அவர்கள் தனது தந்தையின் நிழலில் இருந்து வெளியே வர 65 வயது ஆகியுள்ளது. கோமாளி ஸ்டாலின் சொல்கிறாரா, அம்மா தனது கிலேமரால் ஆட்சியில் நீடித்தார் என்று?", என்று மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/SuryahSG/status/1099371815594450944?s=19


அ.இ.அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர், சிங்கை ராமச்சந்திரன் பதிவிடுகையில், "எப்படி ஒருவரால் இவ்வளவு கீழ் தரமாக பேச முடியும்? அம்மா அவர்கள் தனது திறமையால் முதல்வர் ஆனவர். தனது தந்தையின் நிழலால் அல்ல. நீங்கள் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்று கூறிக்கொள்ளவே அசிங்கமாக இருக்கிறது. இது, ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட இழிவு", என்று பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/RamaAIADMK/status/1099380794081009664?s=19


தொடர்ந்து பல பெண்கள் தி.மு.க தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் அறுவருக்கத்தக்க பேச்சை கண்டித்து வருகின்றனர்.




https://twitter.com/AnuNaganathan/status/1099312752911364096?s=19




https://twitter.com/lalitha_jr/status/1099561699957297154?s=19




https://twitter.com/NarasimhanUsha/status/1099581171736838144?s=19

Similar News