“ஸ்டாலினால் சட்டையை மட்டும்தான் கிழித்துக்கொள்ள முடியும்” - வறுத்தெடுத்த அன்புமணி!!

“ஸ்டாலினால் சட்டையை மட்டும்தான் கிழித்துக்கொள்ள முடியும்” - வறுத்தெடுத்த அன்புமணி!!

Update: 2019-09-14 10:32 GMT


பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசின் முத்துவிழா பொதுக்கூட்டம், தருமபுரி வள்ளலார் திடலில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியதாவது:-


மனசாட்சியே  இல்லாமல், ஸ்டாலின் விவசாய கடன்கள் ரத்து, கல்விக்கடன் ரத்து, வங்கிக் கடன் ரத்து என தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் பொய்களை வாரி இறைத்ததார்.


ஸ்டாலினால் சட்டையை மட்டும் தான் கிழித்துக் கொள்ள முடியும். ஆட்சிக்கு வரும் அவரது கனவு பலிக்காது.


தமிழகத்தில் தற்போது நடைபெறும் பிரச்னைகளுக்கு காரணம் தி.மு.கதான். காவேரி விவகாரம், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த தி.மு.க, தற்போது, முதலை கண்ணீர் வடிக்கிறது.




https://youtu.be/p_VW8AqXafM



விமர்சனங்கள் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலில், ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் என்னைப் பற்றியும், மருத்துவர் ஐயாவைப் பற்றியும் மிக மோசமாக விமர்சனம் செய்தார்கள். 3-ஆம் கட்ட பேச்சாளர்களைப் போன்று பேசினார்கள்.


தி.மு.கவில் வெற்றிகொண்டான் என்று பேச்சாளர் இருந்தார். அவர் பேசினால் காதை பொத்திக்கொள்ள வேண்டும். அந்த அவ்வளவு மோசமாக பேசுவார். அவரைப் போல பேசினார் ஸ்டாலின். ஒரு கட்சியின் தலைவர் அவர். அவர் நாகரீகமாக பேச வேண்டும். பண்புள்ள வகையில் பேச வேண்டும்.


வண்டலூரில் நடந்த கூட்டத்தில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் என்று ஐயாவை, பிரதமர் நரேந்திர மோடி சொன்னார். ஆனால் ஐயாவை ஸ்டாலின் ஒருமையில் பேசுகிறார். கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிறார்.


அவரது மகன் உதயநிதி அதற்கு மேலே. அவரைப் பற்றி உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். சினிமாவில் நடித்துக்கொண்டு, நடிகைகள் பின்னால் சுற்றிக்கொண்டு திரிபவர். அதைத்தவிர எதுவும் தெரியாது. எந்த தகுதியும் இல்லை.


உதயநிதியிடம் நான்கேட்டேன், உங்கள் கட்சியில் உங்கள் குடும்பத்தைதவிர வேறு யாருமே கிடையாது. உங்களின் தாத்தா, உங்கள் அப்பா, தயாநிதி மாறன், அவரது அப்பா முரசொலி மாறன், அத்தை கனிமொழி, பெரியப்பா அழகிரி, மச்சான் சபரீசன், இப்படி உங்கள் குடும்பம்தான் கட்சியா?
உங்கள் கட்சியில் வேறு யாருக்கும் தகுதி கிடையாதா?




https://youtu.be/L3poypmETFI



இவ்வாறு அன்புமணி பேசினார்.


Similar News