நேர்மைக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தரும் மோடி அரசு : போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்பவருக்கு 10 ஆண்டு சிறை, ஒரு கோடி அபராதம்!

போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது.

Update: 2024-02-10 16:45 GMT

போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் செய்வதை தடுக்க 'அரசு தேர்வுகள் மசோதா 2024' -ஐ மத்திய அரசு  உருவாக்கியுள்ளது. முறைகேடு செய்பவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு கோடி வரை அபராதமும் விதிக்க மசோதா வகை செய்கிறது. அத்துடன் கம்ப்யூட்டர் வழியாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மிகவும் பாதுகாப்பாக நடத்த பரிந்துரை செய்வதற்காக ஒரு உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது .


இந்த மசோதா கடந்த ஆறாம் தேதி மக்களவை நிறைவேறியது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவிலும் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்து கூறியதாவது :-


நாட்டின் இளைஞர் சக்தி முக்கியமானது. அந்த சக்தியின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை தடுக்கவே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. தகுதியானவர்களை தகுதியற்றவர்கள் முந்தி செல்ல அனுமதிக்க மாட்டோம். அதே சமயத்தில் நம்பகமான போட்டி தேர்வாளர்களுக்கு பாதிப்பு இல்லை. மோசடி செய்பவர்களையே இது குறி வைக்கும் .இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News