ஒடிசாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பெரும் நிதியை வழங்கிய மோடி அரசு!

ஒடிசாவில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக மோடி அரசு பெரும் நிதியை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

Update: 2024-05-27 17:01 GMT

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குஜாங் நகரில் நடைபெற்ற பா.ஜ.க  பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் ஒடிசாவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்காக மோடி அரசு பெரும் நிதிய வழங்குகிறது.

ஆனால் தமிழ் ரிமோட் கண்ட்ரோல் கீழ்  இயங்கும் பிஜு ஜனதா தள அரசின் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். சுரங்கங்களையும் தண்ணீரையும் சூறையாடுகின்றனர். மோடி அரசாங்கம் ஜல்ஜீவன் பிகாஷ் திட்டத்தின் கீழ் நிதி மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கியது .

ஆனால் அந்த பணம் மற்றும் வீடு தேவைப்படும் மக்களை சென்றடையவில்லை. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள அரசு தனது 25 ஆண்டு கால ஆட்சியில் மகா கலாபாதா,ராஜ்கனிலா மற்றும் பட்குராவில் வெள்ளத்தை கட்டுப்படுத்த எதையும் செய்யவில்லை. மக்கள் உண்மையிலேயே வளர்ச்சியை விரும்பினால் பா.ஜனதாவுக்கு வாக்களித்த தமிழ் ரிமோட் கண்ட்ரோலை தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி பேசினார்.


SOURCE :Dinamani

Tags:    

Similar News