மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க அதிரடி திட்டமிடும் மோடி அரசு - நெடுஞ்சாலைகளில் 810 சார்ஜிங் மையம் விரைவில்
பதினாறு நெடுஞ்சாலைகளில் 810 சார்ஜிங் மையங்களை அமைக்க இருக்கிறது மத்திய அரசு.
பதினாறு நெடுஞ்சாலைகளில் 810 சார்ஜிங் மையங்களை அமைக்க இருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் ஜென்ஸ் எனர்ஜி சர்வீஸ் நிறுவனம் நாட்டின் 16 நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான 810 சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை - புனே, அகமதாபாத் - வதேரா, டெல்லி - ஆக்ரா. ஆக்ரா - நாக்பூர் நகரங்களுக்கு இடையான நெடுஞ்சாலைகளில் 16 சாலைகளில் 10275 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கும் வகையில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.
ஒவ்வொரு 25 கிலோமீட்டர் தொலைவு ஒரு 50 கிலோவாட் திறன் உள்ள சார்ஜ்ரும், ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தொலைவிற்கும் ஒரு 100 கிலோ வாட் திறன் உள்ள சார்ஜரும் அடுத்த ஆறு முதல் 8 மாதங்களுக்குள் சார்ஜர் நிலையங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.