மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவி ஏற்ற உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவி ஏற்ற உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Update: 2019-11-29 03:27 GMT

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க - சிவ சேனா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கைப்பற்றி ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் இருந்தும் இழுபரி காரணமாக சிவ சேனா விடுத்த நிபந்தனையை ஏற்க மறுத்த பா.ஜ.க-வால் ஆட்சியமைக்க முடியவில்லை, அதனால் சிவ சேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அவர்களும் பேச்சுவார்த்தை காரணமாக நீண்ட நாட்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஆளுநர் அழைப்பை எந்த கட்சியும் ஏற்றுக்கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்க காரணத்தால் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதன் பிறகு இரவோடு இரவாக அஜித் பவார் பா.ஜ.க-வுடன் கை கோர்த்ததால் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் பதவியையும் அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றனர். அங்கே இருந்து அரசியல் மகாராஷ்டிரா அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது, அதை எதிர்த்து சிவ சேனா உட்பட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக தொடர்ந்தனர். 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். ஆதலால், அஜித் பவார் தனது துனை முதலமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸும் விலகினர். 


இந்நிலையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இவர்கள் மூவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தது அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். நேற்று மாலை மும்பை சத்ரபதி சிவாஜி பூங்காவில் பதவி ஏற்பு விழா நடந்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மஹாராஷ்டிரா முதல்வராக சிவனேச கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்றதை தொடர்ந்து, அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "மஹாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, விடா முயற்சியுடன் உத்தவ் செயல்படுவார் என நான் நம்புகிறேன்." இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் பிரமதர் மோடி குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1200048700556492802?s=20



Similar News