பிரதமர் மோடியின் காப்பீடு திட்டத்தில் அதிகம் பயனடைந்த மக்கள் தமிழர்களே! 42% மக்கள் பயன்!

பிரதமர் மோடியின் காப்பீடு திட்டத்தில் அதிகம் பயனடைந்த மக்கள் தமிழர்களே! 42% மக்கள் பயன்!

Update: 2019-11-26 12:47 GMT

பிரதமர் நரேந்திர மோடி, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் “ஆயுஷ்மான் பாரத்” என்ற பிரதம மந்திரி இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.


நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் (40 கோடி மக்கள்) பயனடையும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும்.


இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்ற பயனாளிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையுள்ள 10 மாதங்களில் புற்றுநோய் சிகிச்சை பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டன. புற்றுநோயாளிகளுக்கு அளித்த சிகிச்சைக்கான கட்டணங்களை பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன.


இதில் 72% பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதைப்போல மாநில வாரியாக எடுத்த புள்ளி விபரத்தில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் புற்றுநோய் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 42% தமிழர்கள் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 24.7 சதவீதம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.


தமிழகத்தில் 413 மருத்துவமனைகள் “ஆயுஷ்மான்” காப்பீடு திட்டத்தில் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News