டிஜிட்டல் புரட்சியின் சக்தி-இணைய வழி மருத்துவ ஆலோசனை குறித்து மோடி பெருமிதம்

இணையவழி மருத்துவ ஆலோசனைக்கான இ - சஞ்சீவினி செயலி இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் சக்தியை காட்டுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2023-02-27 11:30 GMT

பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் பேசும்போது கூறியதாவது:-


இணையவழி மருத்துவ ஆலோசனைக்கு சஞ்சீவினி ஆப் என்ற பெயரிலான செயலி உதவி வருகிறது. இந்த செயலி சாதாரண மக்களுக்கு நடுத்தர வகுப்பு மக்களுக்கு அல்லது கடைக்கோடி பகுதியில் வாழ்பவருக்கு உயிர்காக்கும் செயலியாக அமைந்துள்ளது. இதுதான் இந்திய டிஜிட்டல் புரட்சியின் சக்தியாகும். இந்த செயலி வழியாக தொலைவில் இருந்து கொண்டு காணொளி காட்சி வழியாக உங்கள் உடல் நல குறைவுக்கு டாக்டரை கலந்து ஆலோசனை செய்யலாம்.


இதுவரை இந்த செயலி மூலம் மருத்துவ கலந்தாலோசனை  செய்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. கற்பனை செய்து பாருங்கள் 10 கோடி கலந்த ஆலோசனை காணொலிக் காட்சி வழியாக நடந்துள்ளது. டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையே ஒரு வியப்பூட்டும் பந்தம் வருகிறது. இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்த சாதனைக்காக இந்த வசதியை பயன்படுத்திய டாக்டர்கள் நோயாளிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.


இது ஒரு மிகப்பெரிய சாதனை. இது மக்கள் தங்கள் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமைகிறது. கொரோனா காலத்தில் ஈ - சஞ்சீவினி ஆப் மக்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது. இந்த செயலி எவ்வாறு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி உதவுகிறது என்பதை நிரூபிக்கிற வகையில் இது பற்றி பிரதமர் மோடி ஒரு டாக்டருடனும் ஒரு நோயாளியுடனும் கலந்துரையாடிவிட்டு தொடர்ந்து தூய்மை இந்தியா இயக்கம் பற்றியும் படேல் பிறந்தநாள் போட்டி பற்றியும் பேசினார்.



 


Similar News