பிரதமர் மோடிக்கு 23 கோடி நிரந்தர ரசிகர்கள்.... இருப்பது உங்களுக்கு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு சுமார் 23 கோடி நிரந்தர ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Update: 2023-04-26 01:27 GMT

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக கடை கோடியில் இருக்கும் சாமானிய மக்களின் வெற்றியை இந்தியா முழுவதும் பகிர்ந்து கொண்டு வருகிறார். குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துக்கள் அனைத்தும் தற்போது தொகுக்கப்பட்ட புத்தகங்களாக வெளியிடப்பட்டு இருக்கிறது. காலங்கள் தற்போதும் மாறிக் கொண்டு வந்தாலும் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம், அந்த அளவிற்கு இந்த ஒரு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தியானது.


குறிப்பாக இதன் 100வது பகுதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்த நிலையில் அரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள IIM-ல் படிக்கும் மாணவர்கள் மங்கி பார்த்து நிகழ்ச்சியில் வரவேற்பு குறித்து நாட்டின் நான்கு பகுதிகளிலும் எல்லா வயது நபரயும் சேர்த்து சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரை சந்தித்து கருத்து கணிப்பு செய்து இருக்கிறார்கள். இவர்கள் தற்பொழுது இதை ஒரு சிறிய ஆய்வு பகுதியாக மேற்கொண்டு இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலோர் அனைத்து வயதினரும் பங்கேற்று இருக்கிறார்கள்.


பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சியில் சுயதொழில் செய்பவர்கள் அதிகமாக கேட்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வெறும் 17.6% பேர் மட்டுமே வானொலியில் கேட்கிறார்கள். பெரும்பாலானோர் டி.வி சேனல்களிலும், செல்போன்களிலும் தான் இந்த ஒரு நிகழ்ச்சியை அதிகமாக கேட்கிறார்கள் என்று கூறி கூறப்பட்டு இருக்கிறது. மேலும் 65 சதவீதம் பேர் இந்தியிலும், 18 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், இரண்டு சதவீதம் பேர் தமிழிலும் இந்நிகழ்ச்சியை கேட்க விரும்புவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 73 சதவீதம் பெயர் மத்திய அரசின் இந்த ஒரு செயல்பாடுகள் மூலமாக தாங்கள் திருப்தி அடைந்திருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சிக்கு சுமார் 23 கோடி நிரந்தர ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News