எல்.கே.அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற மோடி- நாளை பதவி ஏற்பு!

மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ள நிலையில் பிரதமர் மோடி பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே அத்வானியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

Update: 2024-06-08 13:55 GMT

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். இதனை அடுத்து டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் கூட்டணித் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து மூத்த தலைவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே அத்வானியை அவரது இல்லத்தில் நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து மோடி ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் மாலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோரினார். பிரதமர் மோடி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 7.15 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை ஜனாதிபதி மளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எனவே நாளை மாலை 7. 15 மணிக்கு பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கின்றார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு  பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Similar News