'' புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறட்டும்'': பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்து

'' புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறட்டும்'': பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்து

Update: 2020-04-14 04:12 GMT

ஒவ்வொரு சித்திரை மாத முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர்.மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களைசொல்லிக் கொள்வர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று சித்திரை முதல் தினத்தில் பிறந்துள்ள சார்வரி புத்தாண்டு தினத்தை அடுத்து தமிழ் மக்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அதில் "அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்". எனக்கூறி வாழ்த்தியுள்ளார்.




 


Similar News