மூன்றாம் பாலினத்தவரை துணை ராணுவ படையில் சேர்க்க மத்திய அரசு பரிசீலனை.! #ModiGovt

மூன்றாம் பாலினத்தவரை துணை ராணுவ படையில் சேர்க்க மத்திய அரசு பரிசீலனை.! #ModiGovt

Update: 2020-07-02 12:08 GMT

ஒவ்வோரு விஷயங்களிலும் நாட்டின் அனைத்து பிரிவினரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படும் மோடி தலைமையிலான அரசு மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஏதேனும் வகையில் நன்மையளிக்க முடிவு செய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக,

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி நாட்டில் நான்கு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக அதிகாரமளிக்கும் வகையிலான மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019 மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவேறியது. இந்நிலையில், துணை ராணுவப் படைகளில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதுதொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து துணை ராணுவ படைகளிடமும் மத்தியில் ஆளும் மோடி அரசு கருத்து கேட்டுள்ளது.

Similar News