மோடியின் ராஜதந்திரமும்! தமிழகம் அடையப்போகும் மிகப்பெரிய பலனும் - சீன அதிபர் சந்திப்பும்!

மோடியின் ராஜதந்திரமும்! தமிழகம் அடையப்போகும் மிகப்பெரிய பலனும் - சீன அதிபர் சந்திப்பும்!

Update: 2019-10-11 06:20 GMT

பிரதமர் நரேந்திர மோடி சற்று வித்தியாசமானவர். எதையும் அதிரடியாக செய்பவர். அரசு சந்திப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளை தலைநகரில் தான் வைப்பார்கள். இதனால் டெல்லியை பற்றி மட்டுமே வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியும். இதை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் சுற்றுலாத்தலங்களிலும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், அயல் நாட்டு தலைவர்களை சந்திப்பதை வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி!


அதன்படி கடந்த முறை சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான, குஜராத்தின் தலைநகர், ஆகமதாபாதில் சந்தித்தார் பிரதமர் மோடி.


பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் சந்திப்பு, தமிழ்நாட்டில் முதலீடுகள் முதல் அனைத்து வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். வளரும் நாடுகளின் இருபெரும் சந்திப்புகள் என்பது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ள நிலையில் உலகம் முழுவதும் தமிழகம் பெயர் சென்றுள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த மிக பெரிய கவுரவம் ஆகும்.


அது மட்டுமில்லாமல் உலக நாடுகளில் உள்ள மிக பெரிய நிறுவங்களின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. முதலீடுகள் குறித்து விரைவில் அறிவுப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல், முதல்வர் எடப்பாடி வெளிநாடுகள் சுற்று பயணம் மேற்கொண்டு ₹4,000 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். சீன அதிபர் தமிழகம் வருகை அந்த ஒப்பந்தங்களை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது குஜராத்தை முன்னேற்றியது போல் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறார் மோடி என்பது நிதர்சனமான உண்மை.


வளரும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் இடம் என்பதால் முதலீடுகள் முதல் சுற்றலா தளம் வரை மேம்படும். இதுவும் மோடியின் ராஜதந்திரமே, என கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.


இன்று தமிழகம் வந்தடைந்துள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. சீனாவில் இருந்தது பாதுகாப்பு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள் என 300 பேர் அடங்கிய அரசு குழு சீன அதிபருடன், மகாபலிபுரம் வந்துள்ளது. இங்குள்ள மகாபலிபுரம் நகராட்சி சீனா அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளது. மகாபலிபுரத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது மகாபலிபுரம்.


தமிழகத்தில் உள்ள,காஞ்சிபுரமும் சீனாவும் வரலாற்று தொடர்புடையது, போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்துதான் புத்த பிக்குவாக சீனாவிற்கு சென்றதாகவும், அங்கு பல கலைகளை கற்றுக்கொடுத்து, புத்த வரலாற்றையும் பரப்பி உள்ளார்.


Similar News