இஎஸ்ஐ திட்டத்தில் மோடி அரசு புதிய சலுகை: 3.6 கோடி பணியாளர்களுக்கு அதிரடி பயன்கள்!!!

இஎஸ்ஐ திட்டத்தில் மோடி அரசு புதிய சலுகை: 3.6 கோடி பணியாளர்களுக்கு அதிரடி பயன்கள்!!!

Update: 2019-06-16 13:59 GMT


தொழிலாளர் மாநில காப்பீடு திட்டத்துக்கான பங்களிப்பை அரசு 4 சதவீதம் குறைத்துள்ளது. ஏற்கனவே 6.5 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. ஏறக்குறைய 2.5 சதவீத குறைப்பு மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் அளவு குறையும் மற்றும் ஊதியமும் கணிசமாக அதிகரிக்கும்.


இதன் மூலம் 3.6 கோடி தொழிலாளர்களும் 12 லட்சம் தொழில் நிறுவனங்களும் பயன்பெறும். இஎஸ்ஐ-க்கு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 1.5 சதவீதம் குறையும். இதனால் தற்போது 4.75 சதவீதம் செலுத்த வேண்டியவை இனி 3.25 சதவீதமாகக் குறையும். இதேபோல தொழிலாளர்களின் பங்களிப்பு 1.75 சதவீதத்திலிருந்து 0.75 சதவீதமாக குறையும்.


1948-ம் ஆண்டு இஎஸ்ஐ சட்டத்தின்படி ரூ.21,000 மாத சம்பளம் பெறுவோருக்கு தொழிலாளர் காப்புறுதி அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ரூ.15,000 ஆக இருந்த அளவு 2016-ம் ஆண்டில் தான் ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar News